ABOUT TAP AWARD
Tamils from South Asian region (Tamilnadu, Srilanka, Malaysia, Singapore etc) have immigrated to US starting from mid 19 th century. Tamils have contributed to the growth of US and in turn have grown as a community. Based on the data collected in 2010 census, there are about 130,000 Tamils living in US. Numerous Tamil professionals have not only contributed but excelled in their field. Even though there have been Tamil luminaries in various fields, there had not been a platform or forum for Tamil youth to learn from and interact with these luminaries. This thought was what drove Melissa Keerthika Subramanian and Soundara Lakshmanan to come up with the idea of Tamil American Pioneer Award. They brought this idea to FeTNA Board and the Board approved the same. Following this, starting in 2014 FeTNA convention in St. Louis, Tamil American Pioneer Awards have been awarded to people who are passionate trailblazers in their careers, who are paving the way for the next generation.
As Robert Frost wrote,
“Two roads diverged in a wood, and I—
I took the one less traveled by,
And that has made all the difference.”
Tamil luminaries have been making a difference by taking the road not taken before. FeTNA has been felicitating such eminent professionals and providing an opportunity for young Tamils to get inspired. Join FeTNA in celebrating the success of our pioneers and in seeding the success of future luminaries.
கடந்த நூற்றாண்டின் பின் பகுதியில் தென் ஆசியாவில் இருந்து புலம் பெயர்ந்து, அமெரிக்க மண்ணில் குடியேறி, அமெரிக்காவின் வளர்ச்சியுடன் தானும் வளர்ந்த இனம் தமிழினம். தமிழகம், ஈழம், சிங்கப்பூர்,மலேசியா என்று பல நாடுகளில் இருந்து வந்து குடியேறினர் தமிழர். 2010 ஆம் ஆண்டின் மக்கள் கணக்கெடுப்பின் படி அமெரிக்க மண்ணில் 130,000 தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள், அமெரிக்கக் குமுகாயத்திற்கு பல பங்களிப்புகளை வழங்கி, உயர்ந்த இடத்தில் திகழ்கின்றனர்.
பலர், பல்வேறு துறைகளில் உயர்ந்து புகழ் பெற்றிருந்தாலும், அவ்வாறு புகழ் பெற்ற தமிழர்கள், இங்கு வளரும் நம் தமிழ்க் குழந்தைகளுக்கு முன்னோடியாக இருந்து, வழிகாட்டியாக அமைய ஒரு தளம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் செல்வி கீர்த்திகா மெல்லிசா சுப்ரமணியன் மனதில் தோன்றியது. அவருடன் திருமதி சௌந்தரா இலட்சுமணனும் இணைய, அமெரிக்க மண்ணில் தமிழும், தமிழனும் உயரப் பாடுபடும் பேரவை இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க, 2014ஆம் ஆண்டு செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த பேரவை விழாவில் தொடங்கப் பட்டது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் "அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள்" விருதுகள் (Tamil American Pioneers, TAP, Awards) நிகழ்வு.
"கானகத்தில்
இரண்டு சாலைகள்.
பார்த்தேன் அவைகளை..
படித்தேன்..
பலர் பாதம் படாத
பாதையைத் தேர்ந்தெடுத்தேன்..
அதனால் தானே
அடைந்தேன் பயன் பல"
என்ற ராபர்ட் ப்ராஸ்ட்டின் வரிகளின் படி, யாரும் பயணிக்காத பாதையில் பயணித்து புகழ் பெற்றவர்களைச் சிறப்பித்து, அவர்களுடன் நம் சிறார்களும் இளைஞர்களும் கலந்துரையாட நல்லதொரு வாய்ப்பை வழங்குகிறது "அமெரிக்கத் தமிழர் முன்னோடிகள்" விருதுகள் நிகழ்வு. வளர்ந்து உயர்நிலை அடைந்த நம் தமிழர் புகழ் பாடவும்...வளரவிருக்கும் வருங்காலத் தமிழ் முன்னோடிகளுக்கு வித்திடவும் பேரவை இந்நிகழ்வினை தொடர்ந்து நடத்தி வருகிறது.